ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் , ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றைத் திருடியதாகச் சந்தேகிக்ககப்படும் ஒருவரை ஹட்டன் பொலிஸார் இன்று (02) கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


கடந்த 30 ஆம் திகதி இரவு ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை ஹட்டன் வெளிஒயா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் திருடிச் சென்று குறித்த பகுதியில் உள்ள முச்சகர வண்டி பழுது பார்க்கும் நிலையத்தில் கொண்டு சென்று மறைத்து வைத்ததுள்ளார்.

பின்னர்  அங்கு பழுது பார்ப்பதற்காக கினிகத்தேன மற்றும் மஸ்கெலியா பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு, திருடிய ஆட்டோவின் பாகங்களை கழற்றி பொருத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


அத்துடன் மேலும் பல பாகங்களை சந்தேக நபர்  விற்பனை செய்துள்ளமையும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது

இந்த நிலையிலேயே உதிரிப்பாகங்கள் மாற்றப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனய உதிரிபாகங்களையும் ஹட்டன் பொலிஸார் கைப்பற்றினர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply