கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் மே 17-ன் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு, மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது.
இதையடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, ஆந்திராவில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் மதுவாங்க குவிந்தனர்.
இதனிடையே பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான கடையின் முன்பு இளம் பெண்கள் மதுபானம் வாங்க வரிசையில் நின்றிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
Look who’s in line at the wine shops ..So much for protecting women against drunk men ? pic.twitter.com/ThFLd5vpzd
— Ram Gopal Varma (@RGVzoomin) May 4, 2020
>
இந்த நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் விமர்சித்துள்ளார். பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், ’இங்கே பாருங்கள் மதுபான கடையின் முன் யார் நிற்கிறார்கள் என்று? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் பேசி வருகிறோம்’ என பதிவிட்டுள்ளார். ராம்கோபால் வர்மாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.