இந்தியாவில் ஆந்திரா பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இரசாயக வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தின் அருகிலுள்ள கிராமத்தில் இரசாயன எரிவாயு தொழிற்சாலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200 க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு கசிவு ஏற்பட்ட பகுதியில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து யாரும் வீடுகளைவிட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாகப்பட்டின மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

1961 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் பாலிமர்ஸ் என இருந்த நிறுவனத்தை தென் கொரியாவின் எல்ஜி செம் கைப்பற்றிய பின் இது 1997 ஆம் ஆண்டில் எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா என்கிற பெயரில் இயங்கத் தொடங்கியது. பொலித்தீனை உருவாக்கும் இந்த நிறுவனமானது பல்துறை பிளாஸ்டிக் உபகரணங்களை தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தில இருந்தே இவ்வாறு இரசாயன வாயு கசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply