தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சிறிய சைக்கிள் ஒன்றில் வந்த குரங்கு ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் சரேயா நகரில் உள்ள ஒரு குறுகலான தெரு ஒன்றில் குழந்தைகள் கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது சிறிய பைக்கில் அங்கு வந்த குரங்கு ஒன்று ஒரு குழந்தையின் காலைப் பிடித்துக்கொண்டு இழுத்து சென்றது.

சுமார் 15 அடிக்கு மேலாக குழந்தையை அந்த குரங்கு தரதரவென்று இழுத்து சென்றது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு வந்து அந்த குரங்கை துரத்தியுள்ளனர்.

பெரியவர்களை பார்த்த அந்த குரங்கு குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Share.
Leave A Reply