அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் உள்ள கிணறொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த அனர்த்தமானது நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை மதீனா உம்மா வீதியை வதிவிடமாகக் கொண்ட சிராஜ் சிமாப் ( 06), சிராஜ் ருஸ்தி (03) ஆகிய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நேற்று (09) மாலை 5.00 மணியளவில் தனது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வெற்றுக் காணியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சகோதர்களும் குறித்த காணியில் கிணற்றுக்காக பதிக்கப்பட்ட குழியில் வீழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து அயவர்களின் உதவியோடு மீட்கப்பட்டு உறவினர்களால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சம்மாந்துறை ஆதரா வைத்தியசாலையில் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனையின் பின் சடலங்களை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, எதிர்வரும் நோன்பு பெருநாளுக்கு என உயிரிழந்த சிறுவர்களுக்காக ஆடைகளும் கொள்வனவு செய்து வைத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.