தென் கொரியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், அந்த நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, தலைநகர் சோலில் உள்ள மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதாவது, கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் தென் கொரியாவில் 34 பேருக்கு புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தென் கொரியாவில் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,874ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியபோது அந்த நாடு எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply