பெண்களுக்குப் பொதுவாகக் கன்னத்தில் மச்சம் இருந்தால் போராடித்தான் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெற முடியும். எடுத்த காரியத்தில் முதலில் தடை ஏற்படும்.

இருப்பினும் சோர்ந்து விடாமல் பொறுமையாகச் செயல்பட்டு முடிவில் வெற்றி காண்பர். தனிமையை அதிகம் விரும்புவார்கள். தான் உதவி செய்வதை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

பெண்களுக்கு இடது தோளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை அமையும். அவர்கள் ஆசைப்பட்ட பொருட்களை உடனுக்குடன் வாங்கிமகிழும் வாய்ப்பு உண்டு. கணவரிடம் பாசம் அதிகம் வைப்பர்.
அதே நேரத்தில் கணவரிடம் கெட்ட பழக்கங்கள் இருந்தாலும், பொறுமையாகச் செயல்பட்டு அதை மாற்ற முயற்சி செய்வார்கள். குடும்ப நிர்வாகம் சிறப்பாகச் செய்வதால் இப்படிப்பட்ட பெண்ணை மருமகளாக அடைபவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

Share.
Leave A Reply