அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா உருவாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 10,899 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232,000 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் 5000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.