இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணமாகாமலேயே வாழ்ந்து வருவதாக கூறப்படும் நடிகை நயன்தாரா, ‘டுவிட்டர்’ பக்கத்தில், குழந்தை ஒன்றை துாக்கி வைத்து உள்ள படத்தை பகிர்ந்துள்ளார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு, அப்படத்தை பகிர்ந்த அவர், அதில், “வருங்கால அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள். பெண்களின் உரிமையில், ஒரு தாயாக இருப்பது மிகப்பெரியது” எனக் கூறியுள்ளார்.

அத்துடன், அன்னையர் தினத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு, “என் வருங்காலக் குழந்தைகளின் அன்னைக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நானும் ரெளடி தான் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். எனினும் தங்களுடைய காதலைப் பற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசியதில்லை.

இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும்.

இந்த நிலையில் இதைப் பார்த்த நெட்டிசன்கள், “நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரோ” என்றும், “திருமணத்தை போல், கர்ப்பத்தையும் மறைப்பாரோ”என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share.
Leave A Reply