கொரோனா வைரஸ் ஒருபோதும் உலகிலிருந்து மறையாமல் இருக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் உலகில் 44 இலட்சம் பேருக்குத் தொற்றியுள்ளது. இவர்களில் சுமார் 298,000 பேர் உயிரிழந்துள்ளனர் 1,658,969. பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரநிலை பணிப்பாளர் டாக்டர் மைக் ரையன், கொரோனா வைரஸ் எப்போது முற்றாக மறையும் என்பது தொடர்பான எதிர்வுகூறல்கள் குறித்து எச்சரித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியளார் மாநாட்டில் பேசுகையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
‘எமது சமூகங்களில் பரவியுள்ள மறறொரு வைரஸாக கொரோனா வைரஸ் உள்ளது என்பதை வெளிப்படுத்துவது முக்கியமானது. இந்த வைரஸ் ஒருபோதும் முற்றாக மறைந்துவிடாமல் இருக்கக்கூடும்’ என அவர் தெரிவித்தார்.