கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது மூன்று இலட்சத்தையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி 188 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 302,462 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 4,443,793 கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 1,588,365 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

 

 

அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுகள்:

  • அமெரிக்கா: 1,417,889
  • ரஷ்யா: 252,245
  • பிரிட்டன்: 234,440
  • ஸ்பெய்ன்: 229,540
  • இத்தாலி: 223,096
  • பிரேஸில்: 203,165
  • பிரான்ஸ்: 178,994
  • ஜேர்மன்: 174,478
  • துருக்கி: 144,749
  • ஈரான்: 114,533
  • சீனா: 84,029
  • இந்தியா: 82,103
  • பேரு: 80,604
  • கனடா: 74,782
  • பெல்ஜியம்: 54,288

 

கொரோனாவினால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்:

  • அமெரிக்கா: 85,906
  • பிரிட்டன்: 33,693
  • இத்தாலி: 31,368
  • பிரான்ஸ்: 27,428
  • ஸ்பெய்ன்: 27,321
  • பிரேஸில்: 13,999
  • பெல்ஜியம்: 8,903
  • ஜேர்மன்: 7,884
  • ஈரான்: 6,854
  • நெதர்லாந்து: 5,609
  • கனடா: 5,592
  • சீனா: 4,637
  • மெக்ஸிகோ: 4,477
  • துருக்கி: 4,007
  • சுவீடன்: 3,529
  • இந்தியா: 2,649
  • எக்குவாடோர்: 2,338
  • ரஷ்யா: 2,305
  • பேரு: 2,267
  • சுவிட்சர்லாந்து: 1,872
  • அயர்லாந்து: 1,506
  • போர்த்துக்கல்: 1,184
  • ருமேனியா: 1,053
  • இந்தோனேஷியா: 1,043

வுஹான்

அண்மைக்காலமாக கொரோனா தொற்றின் பரவல் பூஜ்ஜியமாக காணப்பட்ட சீனாவின் வுஹானில் இன்றைய தினம் 11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நகரின் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

வுஹான் நகரில் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆணைக்குழுவின் அறிக்கையில், மே 13 அன்று, வுஹானில் ஒரே நாளில் 67,026 பேர் சோதனை செய்யப்பட்டனர்.

மே 13 நிலவரப்படி 559 சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுமிருந்தனர்.

கோவிட் -19 இலிருந்து வுஹான் அதிகாரப்பூர்வமாக 3,869 இறப்புகளைப் பதிவு செய்துள்ளார். இது சீனாவின் இறப்புகளில் பெரும்பாலானவை.

மொத்தம் 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளரகளை கொண்ட நகரமா கவுஹான் உள்ளது.

ஜப்பான்

ஜப்பானில் வியாழக்கிழமை 99 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய 23 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஜப்பானில் பெரும்பாலான பகுதிகளில் அரசாங்கம் அவசரகால நிலையை நீக்கிய ஒரு நாள் நிறைவடைந்த நிலையிலேயே இந் நிலையில் ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை புள்ளிவிபரங்களின் படி ஜப்பானில் மொத்தமாக 16,905 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கையும் 723 ஆக பதிவாகியுள்ளது.

அவற்றில் 712 கொரோனா தொற்றாளர்களும், 13 உயிரிழப்புகளும் டயமண்ட் பிரின்சஸ் கப்பலுடன் இணைக்கப்பட்டவை.

ஏப்ரல் 16 ஆம் திகதிக்கு பின்னர் நேற்று முன்தினம் புதன்கிழமை ஜப்பான், 47 மாணங்கள் மற்றும் 39 நகரங்களுக்கான அவசரகால நிலையை நீக்கியது.

எனினும் டோக்கியோ, ஒசாகா மற்றும் பல கடினமான மாநிலங்கள் அவசரகால நிலைமையின் கீழ் தங்கியிருக்கும், மே 21 அன்று இந்த அவசரகால நிலையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும்.

நாடு தழுவிய அவசரகால நிலை மே 31 வரை தொடர ஜப்பான் அரசு திட்டமிடப்பட்டது, ஆனால் பிரதமர் ஷின்சோ அபே கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நிலையில் நம்பிக்கை கொண்டு, இந்த உத்தரவை அதன் காலாவதி திகதிக்கு முன்பே இரத்து செய்ய முடியும் என்று நேற்று கூறினார்.

அமெரிக்கா

அமெரிக்காவில் வியாழக்கிழமை 27,367 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 1,779 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறுகின்றது.

அமெரிக்காவில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான நியூயோர்க்கில், 343,051 கொரோனா தொற்றாளர்களும், 27,641 உயிரிழப்புகளும் இதுவரை இடம்பெற்றுள்ளன.

அத்துடன் நியூ ஜெர்சி, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் ஆகியவையும் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மொத்தமாக 1,417,889 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 85,906 உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

மெக்ஸிகோ

மெக்ஸிகோவில் வியாழக்கிழமை 2,409 புதய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் ஆரம்பித்ததிலிருந்து அங்கு ஒரே நாளில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன் மெக்ஸிகோ வியாழக்கிழமை கொரோனா தொடர்பான 257 உயிரிழப்பு சம்பவங்களையும் பதிவுசெய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தற்போது மொக்ஸிகோவில் மொத்தமாக 42,595 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4,477 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

பிரேஸில்

பிரேஸிலில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது இரண்டு இலட்சத்தயைும் கடந்துள்ளதாக அந் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை 13,944 புதிய கொரோனா தொற்றாளர்களும், 844 உயிரிழப்புகளும் அங்கு பதிவாகியுள்ளன.

தற்போது பிரேஸிலில் மொத்தமாக 203,165 கொரோனா தொற்றாளர்களும், 13,999 உயிரிழப்பு சம்பங்களும் பதிவாகியுள்ளன.

Photo Credit : CNN

Share.
Leave A Reply