கொரோனா வைரஸை சரியாக கையாளாத சீனா மீது அதிருப்தியில் அமெரிக்கா உள்ளதாகவும், அந்நாட்டுடனான உறவை துண்டிக்க முடியும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தனியார் பெக்ஷ் பிஸ்னஸ் தொலைக்காட்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜிங் பிங் உடன் எனக்கு ஆரோக்கியமான உறவு உள்ளது. ஆனால், தற்போது அவருடன் பேச எனக்கு விரும்பவில்லை. நான் சீனா மீது அதிருப்தியில் உள்ளேன். அதனால் தான் நான் தற்போது அதனை கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவுக்கு பதிலடியாக எங்களால் பல நடவடிக்கைகளை  மேற்கொள்ள முடியும். சீனாவுடனான ஒட்டுமொத்த உறவையும் துண்டிக்க முடியும்.

அவ்வாறு செய்வதன் மூலம், அமெரிக்காவுக்கு 500 பில்லியன் டொலர் மிச்சமாகும். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் வந்தது. அதனை அவர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் எனவும் அந்த நேர்காணலில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply