கொரோனா வைரஸை 4 நாட்களில் குணப்படுத்தும் மருந்துக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக பங்களாதேஷ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதில் சில நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள  நிலையில், மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முறையும் ஆரம்பித்துள்ளது.

எனினும், இதுவரை எந்த மருந்தும் அதிகாரபூர்வமாக சந்தைக்கு வரவில்லை.

இந்நிலையில், கொரோனாவை 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்துக் கலவையை கண்டறிந்திருப்பதாக பங்களாதேஷ் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

பங்களாதேஷை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற வைத்தியரின்  தலைமையிலான குழு கொரோனா குறித்து ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இக் குழு மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின், டொக்ஸிசைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து, கொரோனா நோயாளிகளுக்கு அளித்து சோதித்துள்ளனர்.

மேலும், 60 பேரிடம் இந்த சோதனை நடந்துள்ள நிலையில்,  60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மருந்து கொடுத்த 4 நாட்களில் குணமடைந்திருப்பதாகவும், 4வது நாளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் கிடைத்திருப்பதாகவும் மருத்துவ குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த இம்0மருந்து கலவையை பயன்படுத்தியதால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply