உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது.
இதில் 20 இலட்சம் பேர் குணம் அடைந்து வீடுதிரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 3 இலட்சத்து 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சரியாக கூறினால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 5,082,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 329,294 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 2,020,151 பேர் குணம் அடைந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுடன் 2,733,214 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 45803 பேர் தீவிர பாதிப்புடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1461 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 94994 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் 24 மணி நேரத்தில் 911 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 363 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் 334 பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இந்நிலையில்,
இத்தாலி 161,
ஸ்பெயின் 110,
ஜெர்மனி 77,
பிரான்ஸ் 110,
துருக்கி 23,
பெரு 110,
நெதர்லாந்து 33 ,
பாகிஸ்தான் 46 உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு வேகமாக குறைந்து வருகிறது.
இந்த நாடுகளில் பாதிப்பும் குறைவாகவே உள்ளது. விரைவில் கொரோனா தொற்றில் இருந்து ஐரோப்பிய நாடுகள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.