இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. இதனால் இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது.

மேக்கப்பும், பெண்களும் என்றால் சான்சே இல்லை அடேயப்பா… என்று கண் முன் தேவதைகளாக வலம் வரும் ஒவ்வொரு பெண்களையும், அவர்கள் கால் முதல் தலை வரை போட்டிருக்கும் ஒப்பனைகளையும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் பிரம்மித்து கிரங்கித்தான் போவார்கள்.

பிரம்மன் இயற்கையிலேயே அழகாக படைத்த பெண்களே தங்களை மேலும் மெருகேற்றி அந்த பிரம்மாவையே பிரம்மிக்க வைத்துவிடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக உதட்டுக்கும், கண்ணுக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதே… அடேயப்பா…

பெண்ணின் இதழ்கள் மென்மையானது அந்த இதழ் மீது மென்மையான சாயங்களை பூசி மெருகேற்றி இதழை பார்ப்பவர் இதயத்தை கவரச்செய்து விடுகிறார்கள்.

இதற்காகவே லிப்ஸ்டிக் ஏராளமாக வந்து விட்டன. திரவ வடிவில் கிடைக்கிறது, க்ரீமாக கிடைக்கிறது. இவைகளை தங்கள் முக நிறத்துக்கு ஏற்ப வாங்கி பூசுவார்கள். அதிலும் இப்போது லிப்ஸ்டிக் ஜெல் பிரபலமானது. அதை பூசினால் உதடு சும்மா மினுமினுக்கும்.

இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. ஏனெனில் முக கவசம் கட்டாயமாகிவிட்டது. கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து உதட்டுக்கு மெருகேற்றுவது பார்ப்பவர்களை வசீகரிக்கத்தான்.

ஆனால் அத்தனையும் மூடி மறைத்து விட்டால் என்ன பயன்? இதனால் பாவம் பெண்கள் கவலைப்படுகிறார்கள். இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது.

மீன் விழி, காந்தக் கண் என்றெல்லாம் கவிஞர்களால் வர்ணிக்கப்படும் கண்களை இப்போது மெருகேற்றி தங்கள் ஆசையை கண்களுக்கு மேக்கப் போடுவதில் அதிகமாக காட்டுகிறார்கள்.

கண் புருவத்தின் மீது ஆங்காங்கே சிதறி நிற்கும் புருவ முடிகளை (ஐபுரோ) நேர்த்தியாக்க ஐபுரோ செய்வதும் அதன் மீது மை எழுதி விடுவதும் தனி அழகு. அதோடு இமை முடிகளை மஸ்காரா கொண்டு அழகு செய்கிறார்கள்.

இதனால் அந்த இமை முடிகள் ஒவ்வொன்றும் கிளர்ந்து நிற்கும். பார்ப்பவர்களை கிளர்ச்சி அடைய வைக்கும். அடுத்து கண்ணின் கீழ் இமையில் மெல்லியதால் ஐ லைனர் கொண்டு மை தீட்டுகிறார்கள்.

மேல் இமையில் அவர்கள் அணியும் ஆடைக்கு ஏற்ற வகையில் வண்ணங்களை பூசி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றுகிறார்கள். அது மட்டுமல்ல கண்ணுக்குள் நீந்தும் கருவிழி மீது தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற லென்சுகளையும் பொருத்தி அசத்துகிறார்கள்.

இப்படி இப்போது கண்ணின் மீது தனிக்கவனம் செலுத்துகிறார்கள் பெண்மணிகள். அதேநேரத்தில் முககவசத்தையும் தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற வண்ணங்களில், புதுப்புது வடிவங்களில் அணியவும் பெண்கள் ஆர்வப்படுகிறார்கள். இதனால் மாஸ்கிலும் பல வடிவங்கள் பல வண்ணங்களில் வரத் தொடங்கிவிட்டன.

Share.
Leave A Reply