கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ், இன்றைக்கு சுமார் 200 நாடுகளில் கால் பதித்து விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தநிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை நெருங்கியுள்ளது.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 18 லட்சத்துக்கு மேற்பட்டோரும், பிரேசில் நாட்டில் 6 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் பிரேசில் நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அங்கு நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும், கொரோனா பாதிப்பில் இருந்து 27 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது – ஒரே நாளில் 138 பேர் பலி

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது – ஒரே நாளில் 138 பேர் பலி
கொரோனா வைரஸ்
மாஸ்கோ:

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.72 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 4,05,843 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 138 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 4,693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரு லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

 

Share.
Leave A Reply