கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் சென்ற ஏழு நாட்களில் வீரியம் இழப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் குடும்பத்தில் இதற்கு முன் தோன்றிய சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்களை விட இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறதே தவிர, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

சார்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் மரணத்தை தழுவினர். மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 37 சதவீதம் பேர் உயிரிழப்பை சந்தித்தனர்.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை எதிர்கொண்ட விகிதம் 6.9 சதவீதம் தான். இந்தியாவில் 3.3 சதவீதம் தான். ( இலங்கையில் இதைவிட குறைவு) உள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை தேவையில்லை என்றும், 81 சதவீதம் பேருக்கு அறிகுறி இன்றி அல்லது லேசான அறிகுறியுடன் தான் வைரஸ், தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், 14 சதவீதமானவருக்கு மருத்துவமனையின் கண்காணிப்பு அவசியப்படுகிறது. அதிலும் ஐந்து சதவீதத்தினருக்கு தான் வென்டிலேட்டர் அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மனித உடலில் இருக்கும் காலம் 2 முதல் 14 நாட்கள் வரை மட்டுமே. உடலில் நுழைந்ததும் வைரஸின் வீரியம் படிப்படியாக உச்சம் அடைகிறது.

ஏழு நாட்களில் அதன் வீரியம் குறைந்து விடுகிறது. இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உறுதி செய்துள்ளது. எனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல கட்ட பரிசோதனையின்றி, இரண்டு முறை பரிசோதனை செய்த பின், அவர்களை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு செல்ல மருத்துவர்கள் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரைக்கு பிறகு இந்திய அரசு, மருத்தவமனையிலிருந்து சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் தங்கும் காலகட்டத்தை குறைத்து, பத்து நாட்களில், அவர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இவர்கள் பரிசோதனைக்கு பின்னர், வீட்டிற்கு சென்று, பத்து நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

-டொக்டர் ப்ரியா ராஜ்.

Share.
Leave A Reply