நானும் சிங்கிள் தான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை தீப்தி ஸதி, தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பரபரப்பிற்காக பிகினி புகைப்படத்தை பகிர்ந்தேனா? – நடிகை தீப்தி ஸதி விளக்கம்

‘நானும் சிங்கிள்தான்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கும் தீப்தி ஸதியின் நீச்சல் உடை கவர்ச்சி போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பரபரப்பிற்காக அவர் அதுபோன்ற படத்தை வேண்டும் என்றே எடுத்து வெளியிட்டுக் கொண்டிருப்பதாக பலரும் கூறிக்கொண்டிருக்க, அதன் உண்மையான காரணத்தை தீப்தியே கூறியுள்ளார்.

நான் நீச்சல் உடையில் தோன்றிய போட்டோ ஒன்று வைரலாக பரவிவருகிறது. நான் தனியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த படத்தை எடுத்திருப்பதாக பலரும் கருதிவிட்டார்கள்.

ஆனால் அந்த காட்சி நான் முதன் முதலில் நடித்த மராத்தி படமான ‘லக்கி’யில் இடம்பெற்றது. அந்த கவர்ச்சி காட்சியில் நடிக்க நான் ரொம்பவும் கூச்சப்பட்டேன்.

மிகுந்த மனநெருக்கடிக்கும் உள்ளானேன். ஆனால் அந்த காட்சி படத்திற்கு மிகவும் தேவை என்பதை உணர்ந்ததால் நடிக்க சம்மதித்தேன்.

தீப்தி ஸதி

நான் இன்ஸ்டாகிராமில் அந்த போட்டோவை வெளியிட்டதும், வைரலாகிவிட்டது. நிறைய பேர் அதை பார்த்துவிட்டு நேர்மறையான கருத்துக்களைதான் பதிவிட்டிருக்கிறார்கள்.

தேவையில்லாமல் நான் கவர்ச்சியாக தோன்றமாட்டேன். கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் மட்டுமே அதுபோன்ற காட்சிகளில் நடிப்பேன் எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share.
Leave A Reply