இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை (31.05.2020 – காலை 07.00) மொத்தமாக 1,620 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 781 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 829 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 55  பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ !

இலங்கையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 62 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,620 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்களில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் 25 பேரும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 26 பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய 8 பேர், மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 3 பேர் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களே என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 781 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 829 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 55  பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply