தெலுங்கானாவில் 6 வயது சிறுமி நாய்களால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் மெத்சால் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தெரு நாய்கள் அவள் மீது பாய்ந்து குதறின. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுமியை ஆதித்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து பின்னர் அன்குரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையில் மேலும் மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக ஒரு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் நல ஆர்வலர் அச்யுத்தா ராவ், அலட்சியம் காரணமாக போதுப்பால் மாநகராட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும். மாநகராட்சி அந்த குழந்தையின் இறுதிச் சடங்கிற்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
Post Views: 31