கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டது.

தற்போது யாழ்ப்பாண மாவட்டம் படிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் நிலையில், வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் இன்றைய தினம் மீள திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.

 

அதன் அடிப்படையில் 70 நாட்களின் பின்னர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மீள வழமைக்குத் திரும்பியுள்ளது.

அதிகாலை 5 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

 


நல்லூர் பிரதேச சபையினரால் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறான ஏற்பாடுகள் ஏற்கனவே ஒழுங்குசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்கு திரும்பியது.

பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு, திருநெல்வேலி சந்தை அமைந்துள்ள ஆடியபாதம் வீதியானது காலை 6 – 12 மணி வரை ஒரு வழிப்பாதையாக பொதுமக்களை பயன்படுத்துமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply