தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 29-ந்தேதி 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மே 30-ந்தேதி 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று முன்தினம் (மே 31-ந்தேதி) 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்தது. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் நேற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று 13 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 13,706 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply