முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.