லண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில் இந்த விழாவை இவர்கள் நடத்தியதால் சுமார் 20 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.

இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லவே, விரைந்து வந்த பொலிசார் அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்கள்.

விழாவை நடத்திய குடும்பத்தாருக்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதித்த பொலிசார், இந்த விதியை மீறிய 20 பேருக்கும் தண்டம் விதித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

2 வாரங்களில் தொகையை கட்டவேண்டும் என்றும் இல்லையென்றால் அது இரட்டிப்பாகும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தமிழர்களே தற்போது பிரித்தானியாவில் உள்ள சட்ட திட்டங்கள் படி, 6 பேர் தான் கூட முடியும் என்பதனை நினைவில் வைத்திருங்கள். இன்றுவரை அந்த சட்டம் தளர்த்தப்படவில்லை. புதிய அறிவித்தல் வரும்வரை மிக அவதானமாக இருப்பது நல்லது.

ஏன் எனில் விழா வைக்கும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுவதோடு, விழாவில் கலந்து கொள்ளும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுகிறது.

Share.
Leave A Reply