மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சந்திவெளி ஈழம் தமிழ் குழுவிற்கும் திகிலிவெட்டை குழுவிற்கும் இடையே நேற்று வியாழக்கிழமை (05) மாலை இடம் பெற்ற மோதலில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாய மடைந்துள்ளதுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 2017 ஆம் ஆண்டு சந்திவெளி பிரதேசத்தில் உள்ள ஆலய திருவிழாவின் போது அந்த பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை திகிலிவெட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பகிடி செய்துள்ளனர்.
இதனையடுத்து இரு குழுக்களுக்கிடையோ மோதல் ஏற்பட்டது இந்த மோதல் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று வியாழக்கிழமை திகிலிவெட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்திவெளி பிரதேசத்தில் வைத்து சந்தி வெளி ஈழம் தமிழ் என்ற குழுவினரால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திகிலிவெட்டை குழுவினர் சந்திவெளி ஈழம் தமிழ் குழுவினர் மீது வாளால் வெட்டியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலையடுத்து சந்திவெளி பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து விசேட அதிரடிப் படையினார், பொலிசார் குவிக்கப்பட்டு சண்டையில் ஈடுபட்ட இரு குழுக்களைச் சேர்ச்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் தலைமறை வாகியுள்ளவர்களையும் தேடிவருகின்றனர்.
மேலும் இச் சம்பவத்தில் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.