பொலிஸ் அதிகாரி ஒருவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிருடன் கொளுத்திய சம்பவம் மெக்சிக்கோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் குவாடலஜாரா பகுதியில் கட்டிடத் தொழிலாளியான இளைஞர் முகக்கவசம் அணியாததன் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டருந்த நிலையில், அவர் பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு மெக்சிக்கோ நாட்டில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படுன்றது.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், கொல்லப்பட்ட இளைஞருக்கு நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆர்ப்பாட்டத்தின் போது  பொலிஸ் அதிகாரி மீது ஒருவர் எரியக்கூடிய திராவகத்தை ஊற்றியுள்ளார். அதன்பின்னர் அவர் மீது நெருப்பு வைத்துள்ளார்.

தீபற்றிய நிலையில் பொலிஸ் அதிகாரி உடனடியாக தரையில் விழுந்து தற்காத்துக்கொள்ள முயன்றுள்ளார்.

 

இதன்போது அருகில் இருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் தீக்காயங்களுக்குள்ளான அதிகாரியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம்  தொடர்பில் பொதுமக்களில் 26 பேரை கைதுசெய்துள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply