வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் PCR சோதனையை மேற்கொண்டு நாடு திரும்பினாலும், நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால், தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களில் காலையில் எடுக்கப்படும் மாதிரிகளுக்கான PCR அறிக்கை மாலை வேளைக்குள் விநியோகிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

PCR அறிக்கை கிடைக்கும் வரை அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு, தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் அனில் ஜாசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply