இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் கட்டமாக, தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஜூலை 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

Share.
Leave A Reply