இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 331 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7466 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
இதுவரை பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 129215 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48.5 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 129917 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 88528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 33229 பேருக்கும், டெல்லியில் 29943 பேருக்கும், குஜராத்தில் 20545 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.