தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம், நேற்று இந்த எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது.

இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 1,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் முதன்முறையாக பலி எண்ணிக்கை 20-ஐ தாண்டியுள்ளது. இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பலியானோர் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இன்று பலியானவர்களில் 6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.

798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 18,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று 13,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், 12,421 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply