ஞாபகங்கள் அலாதியானவை. அவை ஒவ்வொரு மனிதரையும் காலத்துக்குக் காலம் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. பொக்கிசமாக புதைந்திருக்கும் நினைவுகள் அனைத்தையும் மனம் மீட்டுப் பார்க்கின்றபோது இதமான ஒரு பசுமை கனக்கும்.

அந்தவகையில் இலங்கையின் பல பாகங்களினதும் நிலைமை இற்றைக்கு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன என்பதைக் காட்டும் படத்தொகுப்பு ஒன்றினை எமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

early-years-006

இது யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் பண்பாட்டு நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டையின் கோட்டைக்காடு பகுதியில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும்.

விவசாயக் குடும்பம் ஒன்று தமது வளர்ப்புக் காளையொன்றின் முன்னால் நிற்கும் காட்சி. வட்டுக்கோட்டை விவசாயத்திற்கும் மாட்டுவண்டிச் சவாரிக்கும் பெயர்போன ஒரு பிரதேசமாகும்.

Main-street-Colombo-city-1980s

இது கொழும்பு மாவட்டத்தின் ‘பெட்டா’ பிரதான வீதி ஆகும். இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்பட்ட புகைப்படம். பெட்டா கொழும்பு மாவட்டத்தின் முக்கியமான ஒரு வர்த்தக முக்கியத்துவம்வாய்ந்த இடமாகும்.

hikkaduwa 2 001

கிக்கடுவை அல்லது இக்கடுவை கடற்கரையாகும். ஸ்ரீலங்காவின் தென் மாகாணத்தில், காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கடற்கரை, கடல் அலை மேல் சறுக்கி விளையாடுதல் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவற்றுக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அதிக சுற்றுலா வருவாய் பெற்றுத்தரும் முக்கிய இடமாகவும் இது திகழ்கிறது. 1980ஆம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

59dd282021d7a-IBCTAMIL

ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணம் கண்டி தலதா மாளிகையின் அன்றைய தோற்றம். இற்றைக்கு 1800ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும்.

Rambutan-fruit-sellers-1905

ஸ்ரீலங்காவின் சப்ரகமுவ மாகாணத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படம். ரம்புட்டான் பழத்திற்குப் பெயர்போன இரத்தினபுரி பகுதியில் 1905ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்டது. வீதியோரமாக ரம்புட்டான் வியாபாரத்தில் ஈடுபடும் மூன்று பெண்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

59dd281ff00f2-IBCTAMIL

ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் ஒரு வீதியோரமாக நடந்து செல்லும் இரண்டு இளம் பெண்கள். வீதியின் மறுபக்கம் எண்ணெய் வண்டில் செல்கின்றது. அன்றைய காலத்தில் வண்டில்களில் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று மண்ணெண்ணெய் விற்கப்பட்டுள்ளது. இன்றைய எண்ணெய்த் தாங்கிகளைப்போல அன்று இந்த வண்டில்கள் பயன்பட்டுள்ளன.

6c6fbc2e0299d449d93ee2c790d83142

கொழும்பில் ஒரு பிரதான சாலையில் ஓடும் அரசாங்க பேருந்து ஒன்று. 1970ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏராளமான பேருந்துகள்தான் அன்றைய கால இலங்கையில் முக்கியமான போக்குவரத்துச் சாதனங்களாகும்.

L246-fullமட்டக்களப்பின் பிரதான ஏரி. வள்ளங்களில் சென்று மீன் பிடிப்பது இவ்விடத்தின் விசேடமாக இருந்தது. மீன்பாடும் தேன் நாடு என மட்டக்களப்பு அழைக்கப்பட்டதற்கு இது முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றது.

இவ்வாறாக இலங்கைத் தீவின் எழில் மிகுந்த காட்சிகள் அந்த நாட்களை மீட்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. ஞாபகங்கள் இன்னும் தொடரும்……….

Share.
Leave A Reply