கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டின் கொலை உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர் கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் கலைக்கப்பட்ட போது, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் அருகே பொலிஸாரினால் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதுகு வலி காரணமாக அவர் இன்று காலி – கராப்பிட்டிய போதனா அவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் போது இந்த யுவதியின் கைகள், கால்களை பொலிஸார் பிடித்து பொலிஸ் வாகனத்துக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்காரணமாக ஏற்பட்ட முதுகு வலியால் அவர் காலி போதனா அவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.