யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்தியப் பிரஜைகள் 06 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு கட்டளை பிரிவுடன் இணைந்த கடற்படையினர், குறிகட்டுவான் இறங்கு துறையை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, இறங்குதுறையில் தங்கியிருந்த சந்தேகத்துக்கிடமான இந்த நபர்களிடம் சோதனை மேற்கொண்ட வேளையில், அவர்கள் இந்தியப் பிரஜைகள் என்று உறுதி செய்யப்பட்டதோடு, அவர்கள் நெடுந்தீவில் முன்னெடுக்கப்படும் கட்டுமானத் தொழிலுக்காக இவ்வாறு குறிகட்டுவான் இறங்குதுறையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதித்தபோது, அவை காலாவதியாகியிருந்ததோடு, அவர்களில் சிலர் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து, இவ்வாறு வேலைவாய்ப்பில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply