திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட நிலையில் குழி ஒன்றில் நேற்று (11) மாலை கண்டெடுக்கப்பட்டதாக தம்பலகாமப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் குடியிருந்து வந்த குடும்ப பெண்ணை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து உரிய குடும்பப் பெண்ணின் கணவரிடம் விசாரனை செய்யப்பட்டபோது தனது மனைவியான எனும் பெண்ணை மண்வெட்டியால் தாக்கி தனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் உயிரிழக்கச் செய்து விட்டு சுமார் 75 மீற்றர் தூரத்தில் குழி ஒன்றில் புதைத்து விட்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த கணவனான இகலகெதர மஹிந்த ஜெயலபண்டார வயது (41) என்பவர் கைது செய்யப்பட்டு விசாரனை செய்யப்பட்ட போது தனக்கு இரு மனைவிகள் உள்ளதாகவும் மூத்த மனைவி வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் கொலை செய்யப்பட்ட மனைவி மினுவாங்கொட திவுலபிடிய பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் (12) நீதிமன்றத்தில் குறித்த பெண்ணுடனான விவாகரத்து தொடர்பான வழக்கு இருந்ததாகவும் தெரியவருகிறது.

குடும்ப பிளவு காரணமாக மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொன்றதாகவும் மேலும் தெரியவயருகிறது.

குறித்த சம்பவ இடத்துக்கு இன்று (12) தடயவியல் பொலிஸார்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி சென்று விசாரணையில் ஈடுபட்டதுடன், கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசானி தேனபது சென்று உரிய சடலம் புதைக்கப்பட்ட குழியினை தோன்றுவதற்கு அனுமதியளித்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

அழுகிய நிலையில் காணப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply