சாவகச்சேரி பகுதியில் மாணவியொருவருக்கும், அவரது சகோதரனுக்கும் ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். நுணாவில் பகுதியில் இன்று (11) இந்த சம்பவம் நடந்தது.
16 வயதான மாணவியொருவரின் வீட்டுக்கு செல்லும் வீதிப் பகுதியில் நிற்கும் ரௌடிகள் சிலர் அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவியின் குடும்பத்தினருக்கும், ரௌடிகளிற்குமிடையில் தொடர்ந்து பகை நீடித்து வந்தது.
நேற்று மதியம் அந்த வீதியால் சென்ற மாணவியை வழிமறித்த ரௌடிகள், அவரை வாளால் வெட்டினர். பின்னர் ரௌடிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மாணவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்றிரவு அந்த வீதியால் வாள்வெட்டிக்கு இலக்கான மாணவியின் சகோதரன் சென்றபோது, அவருக்கும் ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். எஸ்.இளங்கீரன் (24) என்பவரே காயமடைந்தார்.
இதேவேளை வாள்வெட்டு தாக்குதல் நடத்திய தரப்பிலிருந்தும் இருவர் சிறிய காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயசீலன் ஜெனீலன் (28)இ எஸ்.அரவிந்தகுமார் (34) ஆகியோரே சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.