இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று.. நாட்டில் தொற்று பாதித்த மாநிலங்களில் 7வது இடத்தில் உள்ளது.

போபால்: சாமியார் அஸ்லம் பாபா தந்த ஒரே முத்தம், இன்று மத்திய பிரதேசமே டென்ஷனில் உள்ளது.. சாமியாரிடம் இருந்து ஏகப்பட்ட பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 10,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,042 பேர் உடல்தேறி டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. 345 பேர் உயிரிழந்துள்ளனர்.. 2,768 பேர் இன்னமும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இந்த மாநிலத்தில் உள்ள ரத்லாம் மாவட்டத்தில் வசித்து வருபவர்தான் அஸ்லம் பாபா.. “முத்த பாபா” என்றால் ரொம்ப ஃபேமஸ்… தன்னை சந்திக்க வரும் பக்தர்களுக்கு கையில் ஒரு முத்தம் தந்து, ஆசி வழங்கி அனுப்புவார்.. இதனால் இவரை தேடி பக்த கோடிகள் வந்து கொண்டேயிருப்பார்கள்.

இந்த நிலையில், கொரோனா வேகமெடுத்ததும், முத்தம் தந்து அந்த கொரோனாவை குணப்படுத்துவேன் என்று பாபா சொல்லவும், அந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.. ஏராளமானோர் கொரோனாவில் இருந்து தப்பிக்க பாபாவிடம் முத்தம் வாங்க சென்றனர்… அப்போதுதான் பாபாவுக்கே தொற்று வந்துவிட்டது.

எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.. அதனால் கடந்த 4-ம் தேதி உயிரிழந்துவிட்டார். இதற்கு பிறகு அந்த மாவட்டத்தில் விறுவிறு சோதனைகள் நடத்தப்பட்டது..

அப்போது, 85 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

. அதில் 19 பேர் முத்த பாபாவை சந்தித்து விட்டு வந்தவர்களாம்.. எல்லாருக்கும் பாபா முத்தம் தந்து அனுப்பி வைத்துள்ளார்.

அந்த ஒரு முத்தத்தினால் 19 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இவர்களில் 13 பேர் நாயபுரா என்ற ஒரே பகுதியை சேர்ந்தவர்கள்..

இந்த 19 பேர் உட்பட மொத்தம் 24 பேர் அஸ்லம் பாபாவுடன் நேரடி தொடர்பில் இருந்து தொற்றை பெற்றுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபா முத்த சிகிச்சை அளிக்கிறார் என்ற விஷயத்தை மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் இத்தனை விபரீதத்துக்கும் காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை அளித்துள்ள தகவலின்படி, ரத்லாம் மாவட்டத்தில் மட்டும் 85 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதியாகி உள்ளது

Share.
Leave A Reply