திருப்பூர்: காதல் ஜோடி ஒன்று கசமுசகாவில் பொதுவெளியில் ஈடுபட்டுள்ளது.. இதனை 8 வயது சிறுவன் நேரில் பார்த்துவிட்டான்..
எங்கே வெளியில் போய் சொல்லிவிடுவானோ என்று பயந்து, சிறுவனை காட்டுக்குள் அழைத்து சென்று கழுத்து, வயிறு, மார்பு பகுதிகளில் குத்தி கொலையே செய்துவிட்டார் அந்த இளைஞன்!
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் குளத்துக்கு அருகே உள்ள ஒரு புதரில் சிறுவன் ஒருவனின் சடலம் கிடந்துள்ளது..
உடம்பெல்லாம் படுகாயங்கள்.. ஏகப்பட்ட ரத்தம் வெளியேறிய நிலையில் அந்த கிடலம் இருந்ததை அந்த பக்கமாக ஆடு மேய்க்க சென்ற ஒருவர் பார்த்துள்ளார்.. பிறகு இதை பற்றி போலீசுக்கும் தகவல் சொன்னார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையையும் ஆரம்பித்தனர்..
இறந்த சிறுவனின் பெயர் பவனேஷ் என்று தெரியவந்தது. அவனது வயிறு, கழுத்து பகுதியில் அதிகமாக கத்தி குத்து விழுந்துள்ளது…
8 வயது சிறுவனை இவ்வளவு கொடூரமாக கொல்ல யாருக்கு மனசு வந்திருக்கும்? என்ன காரணமாக இருக்கும் என்பதை அறிய தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலையாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்… அப்போதுதான் விசாரணையில், சம்பவத்தன்று, 13 வயது சிறுமி, பவனேஷை வெளியில் அழைத்து சென்றது தெரியவந்தது..
இதையடுத்து அந்த சிறுமியிடம் விசாரணை ஆரம்பமானது… இந்த 13 வயது சிறுமி கல்லூரி இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
வழக்கமாக இவர்கள் தனியாக சந்தித்து காதலை வளர்ப்பது வழக்கம்.
சம்பவத்தன்றும் காதலனை பார்க்க கிளம்பி சென்றுள்ளார் சிறுமி.. அப்போதுதான், பக்கத்து வீட்டு சிறுவன் பவனேஷ் அங்கு விளையாடி கொண்டிருந்திருக்கிறான்.
இவர்கள் 2 பேரையும் பார்த்துவிட்டான், அவன் பார்த்ததை சிறுமியும் கவனித்துவிட்டார். அதனால் வீட்டில் போய் விஷயத்தை சொல்லவிடுவான் என்று காதலனிடம் பயந்துபோய் சிறுமி சொல்லி அழுதுள்ளார்.
உடனே காதலனும், விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கத்தியால் மிக கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ளார்.
இது அத்தனையும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
பவனேஷ் பெற்றோர் பெயர் தங்கராஜ் – சுமதி.. இருவரும் பனியன் தொழிலாளர்கள்.. இருவருமே சம்பவத்தன்று வேலைக்கு போய்விட்டனர்.
இப்போது ஸ்கூல் லீவு என்பதால், அங்கிருந்த குளத்துக்கு பக்கத்தில் இருந்த கிரண்டில்தான் பவனேஷ் விளையாடி கொண்டிருந்திருக்கிறான்.
மகன் கழுத்து அறுபட்ட நிலையில் கிடப்பதை கண்டு பெற்றோர் கதறி துடித்து காண்போரை நிலைகுலைய வைத்தது!!
ஸ்கூல் படிக்கிற வயசில் பிள்ளைகள் இப்படி காதலில் விழுவதையும் தாண்டி, கத்தியுடன் நடமாடுவதும், கழுத்தை அறுத்து கொலை செய்வதும் மக்களை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது