கேரள-தமிழக எல்லையில் நடு வீதியில் திருமண வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான பயணக் கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம்.

தமிழகத்தின் கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த ரோபின்சனும் (30), கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பிரியங்காவும் (25) இந்நிகழ்வில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த ஜோடியிருக்கு கடந்த  மார்ச் 22 ஆம்  திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அன்றைய தினம்  திருமணம் நடைபெறவில்லை.

அதன்பின் அடுத்து ஜூன் 7 ஞாயிற்றுக்கிழமை  திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

 

இதற்காக மணமகனும், மணமகளும் தனித்தனியே இடுக்கி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒன்லைனில் இ-பாஸ் விண்ணப்பித்தனர். இதில் மணமகளுக்கு இரு மாநிலங்களில் இருந்தும் இ-பாஸ் கிடைத்துவிட்டது. ஆனால் மணமகனுக்கு இடுக்கி மாவட்டத்தில் இ-பாஸ் கிடைக்கவில்லை.

குடும்பத்தினர் அனைவரும் பாஸ் பெற்று, எல்லை கடந்து சென்றால், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையும் இருந்தது.

 

இதனால் தமிழக-கேரள எல்லையில் திருமணத்தை முடிக்க இருவரின் குடும்பத்தினரும் தீர்மானித்தனர்.

அதன்படி தமிழக கேரள எல்லையிலுள்ள சின்னார் சோதனைச்சாவடி அலுவலகத்துக்கு முன்னால் வீதியில் பாய் விரித்து திருமண அது திருமண மேடையாக்கப்பட்டது. தமிழ்நாடு பக்கமிருந்து மணமகனும் கேரள பக்கமிருந்து மணமகளும் எல்லைப் பகுதியை நோக்கி வந்தனர்.

 

அங்கு ரோபின்சனும் பிரியங்காவும்; மாலை மாற்றி, தாலிகட்டி திருமணம் செ;துகொண்டனர்

இத்திருமணத்தின்போது வன இலாகா அதிகாரிகளும் உடனிருந்தனர். மணமக்களும் திருமண வைபவத்தில் கலந்துகொண்ட குடும்பத்தினரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

மணமக்கள் மாற்றிக்கொண்ட மாலைகள் உட்பட திருமண வைபத்தில் பயன்படுத்தப்டப்ட சானிடைசர் பயன்படுத்தி கிருமிநீக்கம் செய்யப்பட்டன.

 

முகூர்த்த நேரமான காலை8.30 இற்கும் 8.45 ற்கும் இடையில் திருமண வைபவம் நடைபெற்றது.

கேரள பொலிஸார், சுங்கத்துறையினர், சுகாதாரத்துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

இத்திருமண வைபவத்தில் ஐயர் எவரும் பங்குபற்றவில்லை. சுகாதார மற்றும் கலால்துறை அதிகாரிகளே கிருமிநீக்கம் செய்யப்பட்ட மாலைகளை எடுத்துக்கொடுத்தனர்.

 

இருவரின் பெற்றோர் மாத்திரமே திருமண மண்டபத்துக்கு வர அனுமதிக்கப்பட்டனர் ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் எல்லைப் பகுதிகளிலிருந்து திருமணத்தை பார்வையிட்டனர்.

திருமணத்தின் பின்னர் மணமகள்  பிரியங்கா, கணவர் ரோபின்சன் சகிதம் தமிழகத்தின் கோவை நோக்கிச் சென்றார்.

 

 

Share.
Leave A Reply