3 மாடி கட்டடமொன்று முழுமையாக சரிந்து கால்வாயில் வீழ்ந்த சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

மிட்நாபூர் மாவட்டத்திலுள்ள நிஸ்சிந்தாபூர் எனும் கராமத்தில், நிர்மாணிக்கப்பட்டு 3 மாடி கட்டமொன்றே இவவ்hறு கால்வாயில் வீழ்ந்துள்ளது.

 

சில தினங்களுக்கு முன்னர் இக்கட்டடத்தில் விரிசல் ஒன்று ஏற்பட ஆரம்பித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று கடும் மழை பெய்தமை கட்டடத்தின் அத்திவாரத்தை மேலும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இக்கட்டத்தின் உரிமையாளர் கீழ் தளத்தில் கடையொன்றை நடத்தி வந்துள்ளார்.

 

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடம் இடிந்தமை கெமராவிலும் பதிவாகியுள்ளது. 30 விநாடிகள் கொண்ட இவ்வீடியோவை இங்கு காணலாம்.

 

Share.
Leave A Reply