நம் வாழும் புனித பூமி இந்த இந்திய நாடு.குடும்பம், கலாச்சாரம் இவற்றிற்கு பெயர் போனது நம் இந்திய நாடு. முன்பெல்லாம் மக்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். சொந்த பந்தங்களுடன் குடும்பமே குதூகலமாக இருக்கும். ஆனால், தற்போதைய வாழ்க்கை முறை நம் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.மக்கள் தனித்து வாழ்வதையே விரும்புகின்றனர்.
கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல், வேலை, படிப்பு, தனிக்குடித்தனம் இப்படி ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு குடும்ப உறுப்பினர்கள் வேறு வேறு இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய காலத்தில் குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலே ச ண்டை வந்துவிடுகிறது.
இந்நிலையில், 39 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்திவருகிறார். இந்தியாவின் மிசோராம்மை சேர்ந்த இந்த சியோனா சானா என்ற நபர்.39 பெண்களை திருமணம் செய்துகொண்ட சியோனா சானாவிற்கு மொத்தம் 94 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு திருமணம் முடிந்துள்ளநிலையில் 14 மருமகள்கள் உள்ளனர். ஒரு பெண்ணை காட்டியே சமாளிக்க முடியாத இந்த காலகட்டத்தில் 39 பெண்கள் .
அதுமட்டும் இல்லாமல், 34 பேரக்குழந்தைகள் என மொத்தம் சியோனா சானவை சேர்த்து 181 பேர் ஒரே வீட்டில் வசித்துவருகின்றனர். மேலும் ஒரு தொழிற்சாலை போல் இயங்கும் இந்த குடும்பத்தில், ஒருநாளைக்கு சுமார் 50 கிலோ வரை சமையலுக்கு அரிசி பயன்படுத்துகிறார்களாம். வீடியோ கீழே உள்ளது.