இலங்கையின் சில கிராமங்களில் இன்று காலை முதல் காகங்கள் அதிகளவில் இறந்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி, வெலிகந்தை, நெலும்வெவ ஆகிய கிராமங்களிலேயே இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
காகங்கள் இறப்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது குறித்து பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமாக இறக்கும் காகங்கள் பிரதேசத்தில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகங்களுக்கு தேங்காய் பால் கொடுத்து அவற்றின் உயிர்களை காப்பாற்ற முயற்சித்து வருவதாக கிராமவாசிகள் கூறியுள்ளனர்.
மரங்களில் இருக்கும் காகங்கள் திடீரென இறந்து விழுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காகங்கள் இறப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவித்து துரிதமான விசாரணைகளை நடத்தவுள்ளதாக வெலிகந்தை பிரதேச செயலாளர் ஹைரு நிஷா தெரிவித்துள்ளார்.