ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடு திருடியதாகக் கூறி வாலிபர் ஒருவரை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பால்கர் என்ற கிராமத்தில் ஒருவர் வளர்த்து வந்த ஆடு திருடு போனது. அந்த ஆட்டை திருடியதாக 16 வயது வாலிபரை பிடித்து 3 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்துள்ளனர். அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததுடன், முகத்தில் கரி பூசி உள்ளனர். தலை முடியையும் வெட்டி உள்ளனர்.
ஆடு திருடிய குற்றத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆடு திருடியதாக கூறி வாலிபரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.