மத்திய பிரதேச மாநிலத்தில் சாப்பிட மாம்பழம் இல்லாத கோபத்தில் கணவன் மனைவியை அடித்தே கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள ஜலமுண்டா கிராமத்தில் கார்த்திக் ஜெனா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கார்த்திக் நேற்று இரவு மிகவும் தாமதமாக வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது போதையில் இருந்த கார்த்திக் மனைவிடம் சாப்பிட மாம்பழம் கொண்டு வா, என கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி குழந்தைகள் மாம்பழம் அனைத்தையும் சாப்பிட்டு விட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

போதையில் இருந்த கார்த்திக் கடும் கோபத்தில் அருகில் இருந்த மூங்கில் பலகையால் மனைவியை ஈவு இரக்கமின்றி சராமரியாக தாக்கியுள்ளார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கார்த்திக்கை தடுத்துள்ளனர்.

அப்போது அவரது மனைவி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்கர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

போலீசார் கார்த்திக் ஜெனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாம்பழத்திற்காக மனைவியை அடித்துக் கொன்ற கொடூரச் செயல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply