கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 44 பேர் பலியாகியுள்ளனர். 1,843 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,500ஐ கடந்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ள 1,843 பேரில் 1,789 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
13 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மீதமுள்ளவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18,403 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 7,29,002ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 20,678 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இன்று தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 1,843 பேரில் 1257 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
120 பேர் செங்கல்பட்டை சேர்ந்தவர்கள்.
39 பேர் காஞ்சிபுரத்தையும் 33 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள்.
ராணிப்பேட்டையில் 34 பேரும் தஞ்சாவூரில் 12 பேரும் திருவள்ளூரில் 50 பேரும் திருவண்ணாமலையில் 32 பேரும் தூத்துக்குடியில் 34 பேரும் திருநெல்வேலியில் 17 பேரும் வேலூரில் 20 பேரும் இந்நோய்த் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் இதுவரை 33,244 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.