சீனாவில் பெண் பயணி ஒருவர் மதுபோதையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததால், விமானம் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியது.

கடந்த மாதம் சைனிங்கிலிருந்து கடலோர நகரமான யான்செங்கிற்கு சென்ற உள்நாட்டு லூங் ஏர்லைன்ஸ் விமானம், 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில் தனது இருக்கையில் அழுது கொண்டிருந்த 29 வயது பெண் பயணி லி, திடீரென ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்தார்.

இதையடுத்து ஹெனான் மாகாணத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில், லியை பொலிசார் கைது செய்தனர்.

காதலனால் கைவிடப்பட்ட மன உளைச்சலில் அரை லிட்டர் மது அருந்திய லி, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் விமான ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply