கேரளாவில், பணம் எடுக்க வங்கிக்கு சென்ற பெண் வங்கியின் நுழைவுவாயில் கண்ணாடி கதவை திறக்காமல் அதன் மீது வேகமாக மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் சேரநல்லூரைச் சேர்ந்தவர் பீனா (வயது 46). இவர் நேற்று மதியம் பெரும்பாலூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கு வேலை முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டார்.ஆனால் வங்கியிலேயே சாவியை மறந்து வைத்து விட்டார்.
அதனை எடுப்பதற்காக மீண்டும் வங்கிக்கு சென்றார். சாவியை எடுத்துவிட்டு வேகமாக வெளியேறியபோது, வங்கியின் நுழைவுவாயில் கண்ணாடி கதவை திறக்காமல் அதன் மீது வேகமாக மோதினார். அதில் கண்ணாடி உடைந்து பீனாவின் வயிற்றை பதம் பார்த்தது.
ரத்தம் வடிந்து உயிருக்கு போராடிய அவரை, வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடியோ