மற்றவர்களுக்கு அருகில் வைத்து, உடலின் அசுத்தவாயுவை வெளியேற்றுவது சமூக ரீதியாக விலக்கப்பட்ட விடயம்.
ஆனால், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒருவர் வேண்டுமென்றே அசுத்த வாயுவை வெளியேற்றியதால் பெருந்தொகை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவின் வியனனா நகரிலுள்ள பூங்காவொன்றில் இருந்த இளைஞர் ஒருவரை பொலிஸாரால் விசாரிக்கச் சென்றபோது, அவர் வேண்டுமென்றே தனது உடலின் அசுத்த வாயுவை வெளியேற்றினாராம்.
பொலிஸார் அருகிலிருந்த போது,, கதிரையில் அமர்ந்திருந்த நிலையில், தனது பின்புறத்தை உயர்த்தி, வேண்டுமென்றேஅதிக சத்தத்துடன் பெருமளவு வாயுவை அவர் வெளியேற்றினார் என ஆஸ்திரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் ஆத்திரமூட்டும் வகையிலும் ஒத்துழைக்காத வகையிலும் நடந்துகொண்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இளைஞருககு 500 யூரோ (சுமார் 1 இலட்சம் இலங்கை ரூபா, 43,000 இந்திய ரூபா) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அவர் சட்ட ரீதியாக மேன்முறையீடு செய்ய முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.