அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு சீன ஜனாதிபதி ஹீ ஜின்பிங்கின் உதவியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்; நாடினார் என அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அலோசகர் ஜோன் போல்டன் எழுதியுள்ள புத்தகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி டரம்ப் கூறினார் எனவும் ஜோன் போல்டன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
The Room Where It Happened எனும் தலைப்பிலான 577 பக்கங்கள் கொண்ட புத்தகம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளிவரவுள்ளது. இந்நூலின் சில பகுதிகள் அமெரிக்க ஊடங்களில் வெளியாகியுள்ளன.
அமெரிக்க விவசாயிகளின் உற்பத்தியை சீனா வாங்க வேண்டும் ஜனாதிபதி ட்ரம்ப் விரும்பினார் என அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒசாகாவில் நடைபெற்ற ஜீ 20 மாநாட்டின்போது சீன ஜனாதிபதி ஹீ ஜின்பிங்கை சந்தித்த வேளையில், கலந்துரையாடலை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விடயத்துக்கு ட்ரம்ப் மாற்றினார். என போல்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சமஷ்டி அரசாங்கத்தை நடத்துவதை விடுங்கள், வெள்ளை மாளிகையை நடத்துவது என்பது குறித்தே அவருக்கு தெரிந்திருக்கவில்லை
பின்லாந்து ரஷ்யாவின் ஒரு பகுதியா என முன்னாள் அதிகாரிகளின் பிரதானியான ஜோன் கெல்லியிடம் ட்ரம்ப் கேட்டார்.
பிரிட்டனிடம் அணுவாயுதங்கள் உள்ளதை ட்ரம்ப் அறிந்திருக்கவில்லை. 2018 இல் பிரதமர் தெரேசா சந்திப்பின்போது, அதிகாரி ஒருவர் பிரித்தானிய அதிகாரி அணுவாயுதங்கள் குறித்து குறிப்பிட்டபோது, ‘ஓ நீங்கள் அணுவாயுத பலம் கொண்டவர்களா? என ட்ரம்ப் கேட்டார்.
2019 ஆம் ஆண்டு நியூ ஜேர்ஸியில் சந்திப்பொன்றின் போது, அவர் அடிக்கடி போலி செய்தி வெளியிடுவதாகக் கூறும் சில நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என ட்ரம்ப் கூறினார் எனவும் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.
அரச இரகசியத் தகவல்களை இந்நூல் கொண்டுள்ளதாகவும் அவை நீக்கப்பட வேண்டும் எனவும் கடந்த ஜனவரி மாதம் வெள்ளை மாளிகை தெரவித்திருந்தது. ஆனால், அதை ஜோன் போல்டன் மறுத்துள்ளார்.
இந்நூல் வெளியிடப்படுவதை தடைசெய்வதற்கான அவசர உத்தரவுக்காக நீதிமன்றத்தை அமெரிக்க நீதித்துறை திணைக்களம் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.