தரையிலிருந்த இரு விமானங்கள் மோதி, ஒன்றுடனொன்று இறுகிக்கொண்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

ஒரு விமானத்தின் முன்புறப்பகுதி மற்றொரு விமானத்தின் என்ஜினின் அடியில் சிக்கிக் கொண்டது.

 

பிரிட்டனின் ஸ்கொட்லாந்திலுள்ள அபேர்டீன் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது.

லோகன்எயார் நிறுவனத்தின் விமானமொன்றும் பிளைபீ நிறுவன விமானமொன்று மே இவ்வாறு மோதிக்கொண்டன.

 

பயணிகள், ஊழியர்கள் எவரும் இல்லாத நிறுத்திவைக்கப்பட்டிருந்த லோகன்எயார் எம்ப்ரர் 145 விமானம், பிளைபீ பொம்பார்டியர் கியூ400 ரக விமானத்துடன் மோதியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு விமானங்களும் ஒன்றுடனொன்று செருகப்பட்ட நிலையில் பல மணித்தியாலங்கள் கிடந்தன.

Share.
Leave A Reply