உத்ரா கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவன் சூரஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உத்ராவை பாம்பு கடித்து விட்டதாக கூறி அவருக்கு 16 நாட்கள் சிகிச்சை அளித்தனர்.

 

சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் மீண்டும் சிகிச்சை தேவைப்பட்டதால் உத்ரா தன்னுடைய தாய் வீட்டிலேயே தங்கி இருந்தார்.

இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி மீண்டும் பாம்பு கடித்து உத்ரா இறந்து விட்டார். இது கேரளா முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் உத்ராவின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து காவல்துறை உத்ராவின் கணவர் சூரஜை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மேலும் கொலையாளி அவர் தான் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இந்த நிலையில் உத்ராவை கொலை செய்தது தொடர்பாக சூரஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், ” உத்ராவிற்கு மனதளவில் சில பிரச்னைகள் இருந்தன. இதனால் அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன்.

நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன்.

அதில் அப்போதுதான் பாம்பு கடிப்பதன் மூலம் மரணம் அடைவது குறித்து அதிகமான வீடியோக்களைப் பார்த்தேன்.

பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து உத்ராவைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். இதற்கான பாம்பாட்டி சுரேஷின் உதவியை நாடினேன்.

முதலில் சுரேசிடமிருந்து வாங்கிய அணலி பாம்பைவிட்டு மார்ச் 2-ம் தேதி கடிக்கச் செய்தேன்.

அப்போது உத்ரா சத்தம்போட்டு அலறியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பிவிட்டார்.

அணலி வகை பாம்பு கடித்தால் வலி அதிகமாக இருக்கும், ஆனாலும் அவர் இறக்கவில்லை என்பதால் அடுத்தமுறை அதிக விஷம் கொண்ட கருமூர்க்கன் வகை பாம்பை வாங்கினேன்.

அதை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து, பேக்கில் வைத்து உத்ராவின் வீட்டுக்குக் கடந்த 6-ம் தேதி எடுத்துச் சென்றேன்.

அன்று இரவு அங்கு தூங்கினேன். அதிகாலை 2.30 மணியளவில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த உத்ராவின் மீது பாம்பு இருந்த பாட்டிலை வைத்து, அதன் மூடியைத் திறந்தேன்.

பாம்பு வெளியே வந்து உத்ராவை இரண்டு முறை கொத்தியது. அதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன்.

பின்னர், பாம்பை மீண்டும் பாட்டிலில் அடைக்க முயன்றேன். ஆனால், பாம்பு பீரோவின் அடியில் சென்றுவிட்டது.

உத்ரா இறந்ததை உறுதிசெய்த பின்பு விடியும்வரை கட்டிலில் தூங்காமல் விழித்திருந்தேன். பொழுது புலரும் நேரத்தில் பாத்ரூம் சென்றபோது பாம்பைக் கண்டேன். உடனே, அடித்துக் கொன்றுவிட்டேன்.

பின்னர் வீட்டின் வெளியே வந்து பாம்பு கொண்டு சென்ற பாட்டிலை அருகில் புதர் மண்டிய பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வந்துவிட்டேன்” என அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து சூரஜை உத்ராவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

உத்ராவை கொலை செய்துவிட்டு சூரஜ் 2-வது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த கொலையில் சூரஜின் பெற்றோருக்கும் பங்கிருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

Share.
Leave A Reply